டெல்லியில் கிரிமினல்களுக்கு ஆயுத சப்ளை செய்த முக்கிய நபர் கைது


டெல்லியில் கிரிமினல்களுக்கு ஆயுத சப்ளை செய்த முக்கிய நபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 4:53 PM IST (Updated: 19 Jun 2019 4:53 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கிரிமினல்களுக்கு ஆயுத சப்ளை செய்த முக்கிய நபரை போலீஸ் கைது செய்துள்ளது.

டெல்லியில் கிரிமினல்களுக்கு ஆயுதம் கிடைப்பது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக ஆய்வு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜாசோலா கிராமத்தை சேர்ந்த முகமது பர்வேஸ் என்பவரை போலீஸ் கைது செய்தது. 

முகமது பர்வேஸ் ஆயுத சப்ளையில் முக்கிய நபராக செயல்பட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து இரு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது கொலை வழக்கும் உள்ளது. சட்டவிரோதமாக ஆயுதம் கிடைப்பது எப்படி என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story