தென்கொரியா மற்றும் வங்காளதேசத்தில் தடம் பதிக்கும் தூர்தர்ஷன் இந்தியா சேனல்
தென்கொரியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தூர்தர்ஷன் இந்தியா தொலைக்காட்சி சேனல் தடம் பதிக்கிறது.
புதுடெல்லி,
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, வங்காளதேசத்துடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு தொலைக்காட்சியில் தூர்தர்சன் இந்தியா சேனல் தெரியும்.
இதேபோன்று இந்தியாவில் வங்காளதேச நாட்டின் அதிகாரப்பூர்வ சேனலும் தெரியும்.
தென்கொரியா நாட்டுடனும் நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதன்படி, தென்கொரியா நாட்டில் தூர்தர்சன் இந்தியா சேனல் தெரியும். பதிலுக்கு தென்கொரியாவின் கே.பி.எஸ். சேனல் நம் நாட்டில் தெரியும். அண்டை நாடுகளுடன் இதுபோன்ற இருதரப்பு ஒத்துழைப்பு மிக அவசியம் என கூறினார்.
Related Tags :
Next Story