மகாராஷ்டிர பாட புத்தகங்களில் ஆண், பெண் சமத்துவத்தினை விளக்கும் வரைபடங்கள்
மகாராஷ்டிர பள்ளி பாட புத்தகங்களில் ஆண், பெண் சமத்துவத்தினை விளக்கும் வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன.
புனே,
நாட்டில் பல தலைமுறைகளாக பள்ளி பாட புத்தகங்களில் தாயார் சமையலறையில் காய்கறிகளை நறுக்குவது போன்றும், தந்தை பத்திரிகை செய்தியை படிப்பது போன்றும் வரைபடங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றை பாலபாரதி என அழைக்கப்படும் மகாராஷ்டிர மாநில கல்வி வாரியம் மாற்றி அமைத்து உள்ளது.
உரைநடை மற்றும் பல வரைபடங்களை பாலின சமத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் பாட புத்தகங்களில் மாற்றியமைத்து உள்ளது. இவற்றில் பெண்கள் அதிக முன்னேற்றம் அடைந்தவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் வரைபடமொன்றில், ஆண் மற்றும் பெண் இருவரும் அருகருகே அமர்ந்து காய்கறிகளை சுத்தம் செய்கின்றனர். மற்றொன்றில், பெண் ஒருவர் மருத்துவராகவும், வேறொன்றில் சாலை போக்குவரத்தினை சீர் செய்யும் போக்குவரத்து காவலாளியாகவும் காட்டப்பட்டு உள்ளார்.
அதே பக்கத்தில், ஆண் சமையல் கலைஞர் ஒருவரது வரைபடம் உள்ளது. அதனை கவனித்து ஒரு சில வரிகளை மாணவர்கள் கூறும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. மற்றொரு வரைபடத்தில், ஆண் ஒருவர் துணிகளை இஸ்திரி செய்வது போன்று உள்ளது.
ஆண் மற்றும் பெண் சமம். அவர்கள் இருவரும் எந்த வேலையையும் செய்ய முடியும் என்ற சிந்தனையை மாணவர்களிடம் ஏற்படுத்தவே பாட புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என பாலபாரதி இயக்குனர் சுனில் மகர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story