பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்


பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 20 Jun 2019 12:14 PM IST (Updated: 20 Jun 2019 12:14 PM IST)
t-max-icont-min-icon

பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் மற்றும் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

புதுடெல்லி,

 நேற்று மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

* வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

* வேளாண்துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது 

* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது

* ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.

* சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் உதவுகிறது.

* கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

* தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேற்றம்.

* பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி. முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது .

* உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.

* பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்

* பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முத்தலாக் ஒழிப்பு அவசியம்.

* கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள்

* பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

* ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது.

* திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

Next Story