தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது -நாராயணசாமி தாக்கு
தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை,
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மோசமான நிர்வாகமே காரணம் என்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கேள்வி- பதில் வடிவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அது தன்னுடைய சொந்த கருத்தல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்தார். எந்த உள்நோக்கத்துடனும் தான் கருத்து கூறவில்லை. மக்களின் பார்வை இது என்று குறிப்பிட்டே கருத்து பதிவிட்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில், கோவையில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தரம் தாழ்ந்து உள்ளது. தமிழகத்தை பற்றி பேச கிரண்பேடிக்கு என்ன அவசியம், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட பருவமழை பொய்த்ததே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story