நாட்டின் துணை ராணுவப் படைகளில் 84,000 காலியிடங்கள் -பாராளுமன்றத்தில் தகவல்


நாட்டின் துணை ராணுவப் படைகளில் 84,000 காலியிடங்கள் -பாராளுமன்றத்தில் தகவல்
x
தினத்தந்தி 2 July 2019 10:54 AM GMT (Updated: 2 July 2019 10:54 AM GMT)

நாட்டின் துணை ராணுவப் படைகளில் தற்போது கிட்டத்தட்ட 84,000 பதவிகள் காலியாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று தனது எழுத்துப்பூர்வ பதிலில் மக்களவையில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

மக்களவையில் உள்துறை அமைச்சகம் இன்று  தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளதாவது;-

"சிஏபிஎஃப் (மத்திய ஆயுத போலீஸ் படைகள்) மொத்தமாக அனுமதிக்கப்பட்ட பலம் 9,99,795 ஆகும். சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தரங்களில் 10% காலியிடங்கள் எழுகின்றன, மேலும் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு நன்கு நிறுவப்பட்ட நடைமுறை உள்ளது. தற்போது 84,037 காலியிடங்கள்  உள்ளது  என அதில் கூறப்பட்டு உள்ளது.

சிஆர்பிஎஃப்: அனுமதிக்கப்பட்ட  படைபலம்  - 3,24,810; காலியிடங்கள் - 22,980
பி.எஸ்.எஃப்: அனுமதிக்கப்பட்ட  படைபலம் - 2,63,905; காலியிடங்கள் - 21,465
சி.ஐ.எஸ்.எஃப்: அனுமதிக்கப்பட்ட  படைபலம் - 1,56,013; காலியிடங்கள் - 10,415
எஸ்.எஸ்.பி: அனுமதிக்கப்பட்ட  படைபலம்  - 99,221; காலியிடங்கள் - 18,102
ஐ.டி.பி.பி: அனுமதிக்கப்பட்ட  படைபலம் - 89,438; காலியிடங்கள் - 6643
அசாம் ரைபிள்ஸ்: அனுமதிக்கப்பட்ட  படைபலம்  - 66,408; காலியிடங்கள் - 4432

உருவாக்கப்பட்ட பதவிகள் உள்பட, சிஏபிஎப்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story