தேசிய செய்திகள்

மும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு + "||" + Mumbai: 22 dead in the incident where a wall collapsed due to heavy rainfall

மும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
மும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை, 

புனே நகரில் உள்ள கோந்த்வா பகுதியில் தலாப் பள்ளிவாசல் அருகே குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் இடத்தின் ஓர் ஓரத்தில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இந்த கூடாரங்களையொட்டி அமைக்கப்பட்டு இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 22 அடி உயர சுற்றுச்சுவர் கடந்த 29ந்தேதி இடிந்து விழுந்தது. தொழிலாளர்களின் கூடாரங்கள் மீது அந்த சுவர் விழுந்து அமுக்கியது.

இதில் கூடாரத்தில் தங்கியிருந்த பீகாரை சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.

இந்த துயரத்துக்கு கனமழை ஒரு காரணமாக இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவரின் பலவீனம் மற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் நடந்த கட்டுமான பணியில் அலட்சியம் ஆகியவை மற்றொரு காரணமாக அமைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகளில் ஒருவர் கூறும்பொழுது, உடல் ஒன்றின் கீழ் இருந்த பெண் ஒருவரை நாங்கள் மீட்டுள்ளோம்.  சிறந்த சாதனங்களை பயன்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.  இதுபோன்ற மிக நெருக்கடியான இடத்தில் மீட்பு பணியை மேற்கொள்வது கடினம் நிறைந்த ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.