உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட விவாதிக்கக் கோரி மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ்


உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட விவாதிக்கக் கோரி மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ்
x
தினத்தந்தி 3 July 2019 11:58 AM IST (Updated: 3 July 2019 11:58 AM IST)
t-max-icont-min-icon

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட விவாதிக்கக் கோரி மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடாதது குறித்து மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார்.

இது தொடர்பாக  விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்குக, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும்  வெளியிடுவதென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில்  செம்மொழியான தமிழ் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி. உடனே தமிழையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்திருக்கிறேன் என  பதிவிட்டுள்ளார்.

Next Story