பா.ஜனதா வெற்றி : குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா தொண்டர்


பா.ஜனதா வெற்றி : குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா தொண்டர்
x
தினத்தந்தி 3 July 2019 4:51 PM IST (Updated: 3 July 2019 4:51 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து பிரதமர் மோடியிடம் பா.ஜனதா தொண்டர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று சாதனைப் படைத்தது.

இதனை கொண்டாடிய குஜராத் மாநில பா.ஜனதா தொண்டர் கிம்சாந்த் சந்திராணி, குஜராத்தின் அம்ரேலியில் இருந்து சைக்கிளில் டெல்லிக்கு வந்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்துள்ளார். சந்திராணி பேசுகையில், பா.ஜனதாவிற்கு 300 இடங்கள் கிடைத்தால் நான் சைக்கிளில் டெல்லிக்கு வருவேன், அவர்களை வாழ்த்துவேன் என்று நான் தீர்மானம் எடுத்தேன். அதன்படி இப்போது டெல்லிக்கு வந்துள்ளேன். தூரத்தை சைக்கிளில் கடக்க எனக்கு 17 நாட்கள் பிடித்தது. நான் பிரதமரிடம் பேசினேன், அவர் என்னிடம் 'உங்களுக்கு நிறைய தைரியம் இருக்கிறது' என்று கூறினார். நாளைக்கு அமித் ஷாவை சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.

Next Story