ஆள் கடக்கும் பாதைக்கு பதிலாக ரெயில்வே சுரங்கப்பாதைகள் எப்போது அமைக்கப்படும்? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
ஆள் கடக்கும் பாதைக்கு பதிலாக ரெயில்வே சுரங்கப்பாதைகள் எப்போது அமைக்கப்படும் என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது:-
இந்தியா முழுவதும் 21 ஆயிரத்து 340 ஆள் கடக்கும் பாதை (லெவல் கிராசிங்) இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் அகல ரெயில் பாதையில் 1,419 லெவல் கிராசிங்கும், குறுகிய ரெயில் பாதையில் 9 லெவல் கிராசிங்கும் உள்ளது. இதனால் அங்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடவும், காலவிரயத்தை தவிர்த்திடவும் மனிதர்களால் இயக்கப்படும் லெவல் கிராசிங்கிற்கு பதிலாக ரெயில்வே சுரங்கப்பாதைகள் எப்போது அமைக்கப்படும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி பேசினார்.

Related Tags :
Next Story