முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? என கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டலாம் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? என சுப்ரீம் கோர்ட் கேரள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் 15 நாளில் உங்களின் பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story