சுற்றுலா பயணிகள், குறைகளை ‘டுவிட்டரில்’ தெரிவிக்கும் வசதி
தற்போது, சுற்றுலா பயணிகள் தங்கள் குறைகளை மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க 24 மணி நேர உதவி மையம் செயல்படுகிறது.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘டுவிட்டர்’ மூலம் குறைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. அதேபாணியில், மத்திய சுற்றுலா அமைச்சகமும் ‘டுவிட்டர்’ அடிப்படையில் குறை தீர்க்கும் வசதியை விரைவில் தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக, ‘டுவிட்டர்’ அதிகாரிகளை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி பிரஹலாத் பட்டேல் சமீபத்தில் சந்தித்தார். தங்களுக்கென பிரத்யேக வசதியை செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்மூலம் சுற்றலா பயணிகளின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என்று சுற்றுலா அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story