டாக்டர்களை பாதுகாக்க கடுமையான சட்டம் : ஹேமமாலினி எம்.பி. வேண்டுகோள்
மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் பயிற்சி டாக்டர்கள் இருவர் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன.
புதுடெல்லி,
பா.ஜனதாவை சேர்ந்த ஹேமமாலினி எம்.பி. இந்த விவகாரத்தை மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது எழுப்பினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘டாக்டர்கள் அனைவரும் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளிடம் சாதி, மதம், இனம் என பாகுபாடு பார்ப்பதில்லை. சில நேரங்களில் அவர்கள் 48 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். ஆனால் இத்தகையவர்கள் மீது எவ்வித எதிர்ப்பும் இன்றி மக்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்’ என வருத்தம் தெரிவித்தார்.
எனவே டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையினரை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள டாக்டர்கள் பற்றாக்குறை குறித்தும் சபையில் எடுத்துரைத்தார்.
Related Tags :
Next Story