காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை


காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
x
தினத்தந்தி 5 July 2019 8:16 AM IST (Updated: 5 July 2019 8:16 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் நார்வானி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு பிரிவு தகவல் வந்தது.  இதனை அடுத்து அங்கு சென்ற வீரர்கள் அந்த பகுதியை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கிய நிலையில் இருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.  இதற்கு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து இந்த சண்டை நடந்து வருகிறது.

Next Story