மத்திய பட்ஜெட் 2019: தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு


மத்திய பட்ஜெட் 2019: தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 5 July 2019 4:17 PM IST (Updated: 5 July 2019 4:17 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் 10 சதவீதமாக இருந்த சுங்கவரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு வந்தது. இதனை குறைக்கவேண்டும் என நகை தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மத்திய வர்த்தக அமைச்சகம் இதற்கான கோரிக்கையை  முன்வைத்தது. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரி 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

Next Story