ஒரே ஆண்டில் வங்கிக்கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரி


ஒரே ஆண்டில் வங்கிக்கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரி
x
தினத்தந்தி 5 July 2019 6:42 PM IST (Updated: 6 July 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஒருவர் ஒரே ஆண்டில் தன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் அதற்கு 2 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது முந்தைய ஆட்சிக்காலத்தில், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். அப்போது அவர் ரூ.1,000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

அந்த நடவடிக்கையில் இருந்தே காகித பண புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் வங்கியில் இருந்து ஒருவர் தனது சொந்தப் பணத்தை ரொக்கமாக திரும்ப எடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.

எனவே ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் வரி பிடித்தம் 2 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் வர்த்தக நிறுவனங்கள் பெரிய அளவில் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் தேவை எழலாம் என்பதால் அவர்களுக்கு இந்த 2 சதவீத வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் இந்த 2 சதவீத வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிப்பது என்பதை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை கலந்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story