எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதி மந்திரிகள் சி - பேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் - ப.சிதம்பரம் விமர்சனம்
சூட்கேசுக்குப் பதில் சிவப்புத்துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட் கொண்டு வந்தது குறித்து எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதி மந்திரிகள் சி - பேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 'மத்திய பட்ஜெட்'டை தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாமானியர்களின் குரல்களுக்கோ, அறிவார்த்த பொருளாதாரவாதிகளின் குரல்களுக்கோ செவிமடுக்காத ஒரு பட்ஜெட் என்றும் இந்த பட்ஜெட்டை ‘சுவையற்றது’ என்று விமர்சித்த ப.சிதம்பரம் பரவலான எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்து விட்டது என்றார்.
மக்களிடம் எதையோ மறைக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு. வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்கிறார்கள் இதென்ன நகைச்சுவை ? புள்ளிவிவரங்களின் எந்த வெளிப்படைத்தன்மையையும் இந்த பட்ஜெட் கடைபிடிக்கவில்லை.
மேலும் இன்று சூட்கேசுக்குப் பதில் சிவப்புத்துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட் கொண்டு வந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதி மந்திரிகள் சி - பேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story