டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பெண் கைது


டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பெண் கைது
x
தினத்தந்தி 7 July 2019 1:00 AM IST (Updated: 7 July 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி விமான நிலையத்தில், துப்பாக்கி குண்டுகளுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக திரிஷா மண்டல் என்ற பெண் வந்திருந்தார். அவரது உடமைகளை மத்திய ரிசர்வ் போலீசார் சோதனை செய்தனர்.

அவரது கைப்பையை எக்ஸ்ரே மானிட்டரில் சோதனை செய்தபோது அதில் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து திரிஷா மண்டலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை. விமான நிலைய பகுதி மற்றும் விமானத்தில் வெடிபொருட்களை கொண்டு செல்லவும் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் ஏன் துப்பாக்கி குண்டுகளை கொண்டு சென்றார் என விசாரணை நடக்கிறது.

Next Story