சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பு மத்திய அரசு உத்தரவு
சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான், லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடா மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சமஸ்கிருத மொழியை கற்பித்து வருகிறது. இப்போது இந்த கல்வி நிறுவனங்கள் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத மொழியை கற்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், சமஸ்கிருதம் 3,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மொழியாகும். இம்மொழியை மக்களிடையே வளர்க்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் மத்திய மொழி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' தலைமை தாங்கினார். அப்போது சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் வகையில் மத்திய சமஸ்கிருத கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குறைந்தது இரண்டு சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்களையாவது உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்டது.
Related Tags :
Next Story