தேசிய செய்திகள்

ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது + "||" + Kerala Christian priest held for allegedly sexually abusing boys for over six months

ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது

ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது
கேரளாவில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 6 மாத காலமாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்ட போது இத்தகவல் வெளியே தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விடுதியில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் விடுதிக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது மாணவர்கள் பேசிய போது பாதிரியாரால் நடந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர்களிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிரியார் ஜெர்ரியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரின் மகன் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு
கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேறி மீது பாலியல் பலாத்கார மற்றும் ஏமாற்றுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்
பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
3. வங்காளதேசத்தில் மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களான மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
4. ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்
ராஜஸ்தானில் கணவர் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
5. 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற, விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அரக்கோணம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.