கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் உறுதி
கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் உறுதியாக கூறியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அரசை கடுமையாக சாடினார். பிரதமர் மோடியும் இவ்விவகாரத்திற்கு நாடாளுமன்றத்தில் வேதனையை வெளியிட்ட பிரதமர் மோடி, இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
இந்த நிலையில் கும்பல் கொலைகள் தொடர்பாக ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் அளித்த பேட்டியில், ‘இந்த கொலையை எனது அரசு வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றும் கூறினார். இந்த குற்றவாளிகள் எந்த மதம் அல்லது சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story