குழந்தையை பலிகொடுக்க முயன்ற ஆசிரியை, குடும்பத்துடன் கைது
அசாமில் குழந்தையை பலிகொடுக்க முயன்ற ஆசிரியை குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடால்குரி மாவட்டம் கனாக்பூர் கிராமத்தில் பள்ளியாசிரியை ஒருவர் வீட்டில் விஷேச பூஜையை நடத்தியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னதாக வீட்டில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. அப்போது மூன்று வயது சிறுமியை பலியிட முயற்சி செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்ததும் அதனை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஆசிரியையின் உறவினர்கள் அதனை தடுத்துள்ளனர். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை காப்பாற்ற பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடையையும் இருதரப்பு இடையே கைகலப்பு நேரிட்டுள்ளது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தும் அவர்களை வீட்டிற்குள் நுழையவிடாமல் வீட்டுக்குள் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ஆசிரியை குடும்பத்தினரை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் மூன்று வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. குழந்தையை பலியிட முன்ற மந்திரவாதிக்கு பொதுமக்கள் தர்ம அடியை கொடுத்தனர். இறுதியில் அந்த கும்பலை போலீஸ் கைது செய்தது. பலியிட நிறுத்திவைக்கப்பட்டிருந்த குழந்தை ஆசிரியையின் உறவினருடையது எனவும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொள்கிறார்கள்.
Related Tags :
Next Story