கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது -ஓ.பன்னீர்செல்வம்
கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில், கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது.
10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 மருத்துவ இடங்களை பெற முடியும். நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின்படி 586 மருத்துவ இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story