பீகாரில் மர்ம நோய் தாக்குதல் : தொடர்ந்து குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு


பீகாரில் மர்ம நோய் தாக்குதல் : தொடர்ந்து குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 July 2019 10:33 AM IST (Updated: 9 July 2019 10:33 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் நோயால் தாக்கப்பட்டு தொடர்ந்து குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா,

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில் ஏறத்தாழ 100 குழந்தைகள் பலியாகினர். இந்த பாதிப்பிலிருந்து அம்மாநில நிர்வாகம் மீண்டு வருவதற்குள் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாட்னாவில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் கயாவிற்கு விரைந்துள்ளனர்.மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story