2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு குறைந்தது
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான நிறுவனம் மட்டுமே அதை அச்சிட்டு வருகிறது.
புதுடெல்லி,
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான நிறுவனம் மட்டுமே அதை அச்சிட்டு வருகிறது. அந்த நிறுவனம் அச்சிட்டு கொடுக்க ஒரு நோட்டுக்கு வாங்கும் தொகை விவரத்தை நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் தாக்கல் செய்தார்.
அதன்படி, 2018-2019 நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட விலை ரூ.3.53 ஆக இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய நிதியாண்டில் இந்த விலை ரூ.4.18 ஆக இருந்தது. எனவே, 65 காசு விலை குறைந்துள்ளது. இதன்மூலம், அச்சிடும் செலவு குறைந்திருப்பதாக கருதப்படுகிறது.
இதுபோல், 500 ரூபாய் நோட்டு ஒன்றின் விலை ரூ.2.39-ல் இருந்து ரூ.2.13 ஆக குறைந்துள்ளது. 200 ரூபாய் நோட்டின் விலை ரூ.2.24-ல் இருந்து ரூ.2.15 ஆக குறைந்துள்ளது.
Related Tags :
Next Story