பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி


பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி
x
தினத்தந்தி 11 July 2019 9:10 AM IST (Updated: 11 July 2019 9:10 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் திருமண பந்தல் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியதில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

லாக்கிசராய்,

பீகாரின் லாக்கிசராய் பகுதியில் சாலையோரம் திருமண நிகழ்ச்சிக்காக பந்தல் போடப்பட்டு இருந்தது.  இதனை அடுத்து அங்கு திருமண வீட்டினர் வந்து சென்றபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு லாரி ஒன்று அந்த வழியே வேகமுடன் வந்துள்ளது.  திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி திருமண பந்தல் மீது மோதியது.  இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.  6 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சம்பவம் நடந்தபின் லாரியை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுனர் தப்பியோடி விட்டார்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story