10 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவல்: கோவா மந்திரிசபையில் மாற்றம்? அமித் ஷாவுடன் முதல்-மந்திரி ஆலோசனை


10 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவல்: கோவா மந்திரிசபையில் மாற்றம்? அமித் ஷாவுடன் முதல்-மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 12 July 2019 2:15 AM IST (Updated: 12 July 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

கோவாவில் முதல்-மந்திரி பிரமோத் சவந்த் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிறது.

புதுடெல்லி,

அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒரே நேரத்தில் பாரதீய ஜனதாவுக்கு நேற்று முன்தினம் தாவினர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி பிரமோத் சவந்த் நேற்று டெல்லி சென்றார். அவர் பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கட்சி தாவிய நிலையில், மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. அப்போது பாரதீய ஜனதாவுக்கு தாவியுள்ள சிலருக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story