நிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம் அமலாக்கப்பிரிவு அதிரடி


நிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம் அமலாக்கப்பிரிவு அதிரடி
x
தினத்தந்தி 12 July 2019 3:30 AM IST (Updated: 12 July 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினரான முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம் அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினரான முகுல் சோக்சியுடன் சேர்ந்து, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதையொட்டி, சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன. ஆனால் நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், முகுல் சோக்சி ஆன்டிகுவா பார்புடா நாட்டுக்கும் தப்பினர்.

நிரவ் மோடி கைதாகி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகுல் சோக்சியை நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், உள்நாட்டிலும், துபாயிலும் உள்ள முகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.24 கோடியே 77 லட்சம் சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

துபாயில் உள்ள 3 வணிக சொத்துக்களும், ஒரு மெரசிடஸ் காரும், பல வங்கி கணக்குகளும் முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என அமலாக்கப்பிரிவு கூறுகிறது.

Next Story