டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 July 2019 5:04 PM IST (Updated: 13 July 2019 5:04 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.  விமான நிலையத்தின் வருகை பகுதியில்  உள்ள கழிவறையில் பை ஒன்று கிடந்ததை கவனித்த பயணிகள்,  சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்த கழிவறையில் கிடந்த பையை தீவிர சோதனையிட்டனர். பையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, பையை திறந்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. 

இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  சுங்கத்துறை அதிகாரிகளிடம் தங்க கட்டிகள் ஒப்படைக்கப்பட்டன. கழிவறையில், தங்க கட்டிகள் அடங்கிய பையை வீசிச்சென்றது யார் என்று விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story