அசாம் மாநில வெள்ள நிலவரத்தை அமித்ஷா கேட்டறிந்தார்


அசாம் மாநில வெள்ள நிலவரத்தை அமித்ஷா கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 13 July 2019 10:57 PM IST (Updated: 13 July 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநில வெள்ள நிலவரத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார் .

கவுகாத்தி, 

அசாம் மாநிலத்தில் பலத்த மழையால் 20 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாம் மாநில முதல்–மந்திரி சர்பானந்தா சோனோவாலை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வெள்ள நிலைமை பற்றி கேட்டார்.

அதற்கு சோனோவால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாகவும், நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், தான் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

மத்திய அரசு எல்லா உதவிகளும் அளிக்கும் என்று அவரிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.

Next Story