டிக்-டாக் வீடியோ எடுத்துக்கொண்டே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி


டிக்-டாக் வீடியோ எடுத்துக்கொண்டே  ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 14 July 2019 3:48 PM GMT (Updated: 14 July 2019 3:48 PM GMT)

கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஏரியில் டிக்-டாக் வீடியோ எடுத்துக்கொண்டே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடாக மாநிலம், கொலர் மாவட்டம் வதகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் அருகே  உள்ள ஏரிக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மாலா சென்றுள்ளார்.  அப்போது ஏரியின் அருகே ஆர்வமாக  வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென எதிர்பாரதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிக்-டாக்கைப் பயன்படுத்தி கர்நாடகாவில் ஒரே மாதத்தில் 2  பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தெலங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரு இளைஞர் ஏரியில் டிக்-டாக் வீடியோ செய்யும்போது நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story