டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபர் கைது


டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபர் கைது
x
தினத்தந்தி 14 July 2019 9:41 PM IST (Updated: 14 July 2019 9:41 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபரை விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி, 

டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஆசியா விமானத்தில் நேற்று மும்பை செல்வதற்காக பிரஜ்வால் திவாரி என்ற பயணி வந்தார். அவரது கைப்பையை எக்ஸ்ரே எடுத்து சோதித்ததில் வெடிபொருள் இருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அந்த கைப்பையை மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் திறந்து சோதித்தார். அப்போது அதன் உள்ளே ஒரு உறையில் 8 துப்பாக்கி தோட்டாக்களை அவர் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

 அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story