“பொருளாதார பின்னடைவை சந்திக்க தயாராக இருங்கள்” பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது யஷ்வந்த் சின்காவை எச்சரித்த வாஜ்பாய் புத்தகத்தில் புதிய தகவல்கள்
பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது, பொருளாதார பின்னடைவை சந்திக்க தயாராகுங்கள் என நிதி மந்திரியாக இருந்த யஷ்வந்த் சின்காவை வாஜ்பாய் எச்சரித்தார் என தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது, நிதி மந்திரி பதவி வகித்தவர், யஷ்வந்த் சின்கா.
பீகாரில் பிறந்து வளர்ந்து பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் யஷ்வந்த் சின்கா. 24 ஆண்டு கால பணிக்கு பின்னர் 1984-ல் அரசியலில் குதித்து, சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் அரசுகளில் நிதி மந்திரியாக இருந்தார். இவர் ‘ரிலன்ட்லஸ்’ (‘கடுமை தணியாத’) என்ற பெயரில், சுய சரிதை எழுதி உள்ளார். இன்று (திங்கட்கிழமை) வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் தன் அரசியல் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடந்தது. அதுபற்றிய நினைவுகளை யஷ்வந்த் சின்கா இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அது 1998-ம் ஆண்டு மே மாத தொடக்கம்.
ஒரு நாள் பிரதமர் வாஜ்பாய் அவரது இல்லத்துக்கு வந்து சந்திக்குமாறு என்னை அழைத்தார். நான் அங்கே சென்றபோது வாஜ்பாயின் படுக்கை அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அப்போதே அவர் ஏதோ முக்கியமான ஒன்றை மட்டுமல்ல, மிகவும் ரகசியமான ஒன்றை என்னிடம் சொல்லப்போகிறார் என்பதை யூகித்து விட்டேன்.
அவர் அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை போட்டுடைத்தார். அது என்னை பெருமைப்பட வைத்ததோடு குலுங்கவும் வைத்தது.
அடுத்த சில நாட்களில் அணுகுண்டு சோதனை நடத்த நான் முடிவு செய்திருக்கிறேன்; இது மிகவும் ரகசியமானது. ஏனென்றால் உலக வல்லரசு நாடுகள் இதை விரும்பாது; அவை நம்மை தண்டிக்கும் வகையில், குறிப்பாக பொருளாதார ரீதியில் நடவடிக்கை எடுக்கலாம்.
பொருளாதார சரிவை சந்திக்க தயாராக இருங்கள். அப்படி நடக்கிறபோது நீங்கள் அதிர்ச்சி அடைய நேரிடாது என்பதால், உங்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும் என்று எண்ணினேன் என்று வாஜ்பாய் என்னிடம் கூறினார்.
வாஜ்பாய் ஓசைப்படாமல் இப்படி கூறியதை கேட்டு அப்படியே உள்வாங்கிக்கொள்ள எனக்கு சிறிதுநேரம் பிடித்தது.
எதிர்பார்த்தபடியே இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. அதற்கு கிட்டத்தட்ட எல்லா பெரிய நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.
அந்த சவால்களையெல்லாம் சந்திக்க வாஜ்பாய் அரசு தயாராகவே இருந்தது. அவர்களுக்கு அடிபணிவது அல்லது சரண் அடைவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.
பொருளாதார தடைகள் இந்தியாவைவிட அவற்றை திணித்த நாடுகளையே அதிகமாக பாதித்தன. பொருளாதார தடைகளை விதித்த நாடுகளுக்கு என்ன கட்டாயத்தின்பேரில் அணுகுண்டு சோதனையை நாங்கள் நடத்தினோம் என்று விளக்கினோம். அந்த நாடுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக பொருளாதார தடைகளை திரும்பப்பெறத்தொடங்கின. இவ்வாறு அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

Related Tags :
Next Story