மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்


மீத்தேன், ஷேல் வாயு திட்டம்  எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 15 July 2019 2:52 PM IST (Updated: 15 July 2019 2:52 PM IST)
t-max-icont-min-icon

மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

புதுடெல்லி,

கனிமொழி, திருநாவுக்கரசரின் கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து  கூறியதாவது:-

விவசாயத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது 2 இடங்களில் மட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மீத்தேன், ஷேல் வாயு திட்டம்  எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என கூறினார்.

Next Story