தேசிய செய்திகள்

மோடி அரசு ஒரு போதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது - அமித்ஷா + "||" + Modi govt will never misuse NIA, says Amit Shah in Lok Sabha

மோடி அரசு ஒரு போதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது - அமித்ஷா

மோடி அரசு  ஒரு போதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது - அமித்ஷா
மோடி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி,

வெளிநாட்டிலுள்ள இந்தியர்களையும், இந்திய நலன்களையும் குறிவைத்து நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு  கூடுதல் அதிகாரம் அளித்து 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த மசோதவுக்கு 278 பேர் ஆதரவு அளித்து உள்ளனர்.

என்ஐஏ  தேசிய புலனாய்வு அமைப்பு மசோதா  திருத்தம் தொடர்பாக உள்துறை அமைச்சருக்கும், எய்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கும் இடையே விவாதம் நடந்தது. 

அப்போது பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,   நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என்று தெரிவித்தார். ஆனால் நாட்டில் பயங்கரவாதத்தை  ஒடுக்க  இது பயன்படுத்தப்படும் என கூறினார்.