குஜராத்தில் டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 15 July 2019 5:02 PM IST (Updated: 15 July 2019 5:02 PM IST)
Text Sizeகுஜராத்தில் டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து நேரிட்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்ச் மாவட்டம் மங்குவா பகுதியில் ஆட்டோ ஒன்று டிராக்டர் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் ஆட்டோ உருக்குலைந்தது. அதிலிருந்த பயணிகள் அலறியவாறு சரிந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire