விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை


விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 July 2019 7:48 PM IST (Updated: 15 July 2019 7:48 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரை சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். அவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது ஜெத்வாரா என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஓம் மிஸ்ராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த நபரை காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story