இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்


இமாச்சல பிரதேசம், குஜராத்  மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
x
தினத்தந்தி 15 July 2019 10:04 PM IST (Updated: 15 July 2019 10:04 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தின் கவர்னராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி அப்பதவியில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டு அவரது இடத்தில் இமாச்சலப்பிரதேசம் மாநில கவர்னராக இருந்த ஆச்சாரியா தேவ் விராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக  முன்னாள் மத்திய மந்திரி கல்ராஜ் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

Next Story