நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளம்,
நேபாளத்தில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. விபத்து சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்காள். இந்த பேரழிவில் இருந்து மீண்டுவர தங்களுக்கும் உதவும்படி சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய 32 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 31 மாவட்டங்களில் இதுவரையில் 3366 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story