மும்பையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு; 40 பேர் சிக்கியிருப்பதாக அச்சம்
மும்பையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
மும்பையின் டாங்கிரி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். இதுவரையில் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மிகவும் குறுகலான சந்து பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் கடந்த வாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. குறுகிய சந்து காரணமாக மீட்பு பணியில் தொய்வு காணப்படுகிறது. இடிபாடுகளை அகற்ற மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள் சிக்கிய கட்டிடத்தில் 7-8 குடும்பங்கள் இருந்துள்ளன. இடிபாடுகளுக்குள் 40க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது எனவும் பராமரிப்பின்றி காணப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடக்கிறது.
Related Tags :
Next Story