சுங்க கட்டணம் வசூலிப்பது நீடிக்கும் - நாடாளுமன்றத்தில் நிதின் கட்காரி அறிவிப்பு
நல்ல சாலைகள் வேண்டுமானால், சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பது நீடிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நல்ல சாலைகள் வேண்டுமானால், சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பது நீடிக்கும் என்று நிதின் கட்காரி கூறினார்.
நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில், 40 ஆயிரம் கி.மீ. நீள நெடுஞ் சாலைகள் போடப்பட்டுள்ளன. சில எம்.பி.க்கள், பல்வேறு பகுதிகளில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அப்படி வசூலிக்கப்படும் பணம், கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் சாலை அமைப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.
சுங்க கட்டண வசூல், எனது மூளையில் உதித்த திட்டம். கட்டணம், காலத்துக்கு தகுந்தாற்போல் மாறுபடலாம். ஆனால், சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது. அது நீடிக்கும். நல்ல சாலைகள் வேண்டுமானால், சுங்க கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசிடம் பணம் இல்லை.
இருப்பினும், எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி பஸ்கள் மற்றும் மாநில அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.
சாலை போடுவதற்கு நிலம் கையகப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. மாநில அரசுகள் இதற்கு தீர்வு காண வேண்டும். எனது அமைச்சகம், 80 சதவீத நிலங்களை கையகப்படுத்தாமல், சாலை பணிகளை தொடங்குவது இல்லை. இதை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறோம். ஆனால், மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் நிலம் கையகப்படுத்துவது மெதுவாக நடந்து வருகிறது.
தங்கள் மாநிலத்தை புறக் கணிப்பதாக தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களின் எம்.பி.க்கள் கூறினர். ஆனால், மாநிலங்களுக்கிடையே நான் பாகுபாடு காட்டுவது இல்லை.
2014-ம் ஆண்டு, நான் இந்த இலாகா பொறுப்பை ஏற்றபோது, ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் கோடி மதிப்புள்ள 403 சாலை திட்டங்கள் நிலுவையில் இருந்தன. அத்திட்டங்களை விரைவுபடுத்தி, ரூ.3 லட்சம் கோடியை மிச்சப் படுத்தி மோடி அரசு சாதனை படைத்துள்ளது.
டெல்லி-மும்பை இடையே பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால், 12 மணி நேரத்தில் மும்பையை அடைந்து விடலாம்.
நாட்டில் 25 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, மாநிலம்தோறும் ஓட்டுனர் பயிற்சி மையம் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து, யூரோ-6 மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

Related Tags :
Next Story