சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர்; பா.ஜ.க. தலைவர் சர்ச்சை பேச்சு
மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என ஒடிசா சட்டசபையில் பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஸ்வர்,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதிலும், கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.
உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இதனை அடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலை தொடர்ந்து முத்தலாக் தடை சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதனிடையே, ஒடிசா சட்டசபையில் பா.ஜ.க. அவை துணை தலைவர் பி.சி. சேத்தி முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக பூஜ்ய நேரத்தில் இன்று பேசும்பொழுது, மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என கூறினார்.
இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜே.டி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவை குறிப்பில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தினர்.
ஆனால், எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக நான் விரோதம் எழுப்பும் வகையில் எதுவும் பேசவில்லை. ஆய்வு அறிக்கைகளை அவையில் மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? என சேத்தி கேட்டுள்ளார். சேத்தியின் பேச்சு ஆய்வு செய்யப்படும் என்று சபாநாயகர் எஸ்.என். பேட்ரோ கூறினார்.
Related Tags :
Next Story