உன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் -மருத்துவமனை


உன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை  பெற்று வருகிறார் -மருத்துவமனை
x
தினத்தந்தி 1 Aug 2019 9:37 PM IST (Updated: 1 Aug 2019 9:37 PM IST)
t-max-icont-min-icon

உன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் உ.பி. மாநிலம் உன்னோவ் தொகுதியின் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய உறவினர்கள், வழக்கறிஞருடன் கடந்த ஞாயிறு அன்று சிறையிலிருக்கும் மாமாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் மீது லாரி மோதியது. இருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது கொலை முயற்சியென பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை 7 நாட்களில் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணை டெல்லிக்கு மாற்றப்படுகிறது.

இதற்கிடையே விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை  பெற்று வருகிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை நிபுணர்கள் குழுவால் இலவசமாக செய்யப்படுகிறது" என்று லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story