மனைவியை வைத்து சூதாடிய கணவன், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை
உத்தரபிரதேசத்தில் மனைவியை வைத்து சூதாடி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கணவனே உட்படுத்திய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜகான்பூரில் குடிபோதையில் மனைவியை பணயம் வைத்து சூதாடிய கணவன் தோற்றுவிட்டதால் மனைவியை நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் குடிகாரர் என்றும் சூதாட்டத்தில் பங்கேற்பவர் என்றும் கூறப்படுகிறது. அவருடைய நண்பர்கள் அருண் மற்றும் உறவினர் அனில் ஆகியோர் அடிக்கடி அவருடைய வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தன்று கணவன் சூதாடி தோற்றதும் இருவரும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்புக்காக தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை பின் தொடர்ந்து சென்று கணவர் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். சமாதானம் செய்து மனைவியை காரில் அழைத்துச் சென்றபோது மீண்டும் நண்பர்களை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story