இந்தியாவில் அதிக சொத்துகள் கொண்ட பணக்கார கட்சி பாஜக!
அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து,‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்புக் கழகம்’ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த ஆய்வில் பாஜக சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 22.27 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
இந்த ஆய்வின் முடிவில் பாஜகவிற்க்கு 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1213.13 கோடி சொத்துக்கள் இருந்தன. தற்போது ஒரே ஆண்டில் 22.27 சதவீதம் அதிகரித்து ரூ.1483.35 கோடியை தொட்டுள்ளது.
பாஜகவுக்கு அடுத்தபடியாக, திரிணாமூல் காங்கிரசின் சொத்து மதிப்பு சுமார்10.86 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் ரூ. 26 கோடியே 25 லட்சமாக இருந்த திரிணாமூல் சொத்து மதிப்பு, 2017-18 நிதியாண்டில் ரூ. 29 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு 2016-17இல் ரூ. 680 கோடியே 63 லட்சமாக இருந்தது, 2017-18 நிதியாண்டில் சுமார் 5.30 சதவிகிதம் அதிகரித்து ரூ. 716 கோடியே 72 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில், 2016-17 நிதியாண்டில் ரூ.854 கோடியே 75 லட்சம் என்ற அளவிலிருந்த காங்கிரசின் சொத்து மதிப்பு, 2017-18 நிதியாண்டில் ரூ. 724 கோடியே 35 லட்சமாக குறைந்துள்ளது. இது சுமார் 15.26 சதவிகிதம் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story