போதையில் மனைவியை வைத்து சூதாடிய கணவன்; துஷ்பிரயோகம் செய்த நண்பர்கள்
மது போதையில் ஒருவர் மனைவியை வைத்து சூதாடி உள்ளார். அந்த பெண்ணை நண்பர்கள் துஷ்பிரயோகம் செய்து உள்ளனர்.
லக்னோ
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், மது போதைக்கு அடிமையாகியிருந்த என்னுடைய கணவர் சூதாட்டம் விளையாடும் பழக்கம் கொண்டவர். அடிக்கடி வீட்டிற்கு வரும் கணவரின் நண்பர் அருண் மற்றும் உறவினர் அனில் ஆகியோருடன் மது அருந்திவிட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவார். இந்த நிலையில் என்னுடைய கணவர் கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்த பின்னர், என்னை வைத்து சூதாடினார். அதிலும் தோல்வியடைந்த பின்னர்,அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து என்னை துஷ்பிரயோகம் செய்தனர். இந்த கொடூரத்தை தாங்க முடியாத நான் கோபித்துக்கொண்டு எனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டேன்.
பின்னர், தொடர்ந்து வந்த எனது கணவர் தன்னுடைய தவறுக்கு மன்னிப்புக்கோரி என்னை வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்தார். ஆனால் வரும் வழியிலேயே காரை நிறுத்தி மீண்டும் தன்னுடைய நண்பர்களை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நான் புகார் கொடுத்தும் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். எனவே போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story