இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி -இந்திய ராணுவம்
இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது என்று இந்திய ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.
ஸ்ரீநகர்,
பாகிஸ்தானில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்திய ராணுவம் தரப்பில் கூறுகையில்,
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் குண்டு வீசுவதாக கூறுவது பொய், ஆதாரமற்றது. கொத்துக்குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்துவதாக பொய்யை பரப்புகிறது பாகிஸ்தான் ராணுவம்.
இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.
Related Tags :
Next Story