காஷ்மீர் விவகாரம்: 6 மணிக்கு அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை - மெகபூபா முப்தி
காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சிகளுக்கு மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு,
காஷ்மீரை நோக்கி கடந்த சில நாட்களாக இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 75 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரைவில் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீரில் இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி இல்லத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்., தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story