புனேயில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம், 170 பேர் மீட்பு


புனேயில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம், 170 பேர் மீட்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 6:31 PM IST (Updated: 4 Aug 2019 6:31 PM IST)
t-max-icont-min-icon

புனேயில் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததை அடுத்து 170 பேர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணியை மேற்கொள்ள இந்திய விமானப்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புனேயில் உள்ள சூர்யா மருத்துவமனையில் வெள்ளம் காரணமாக நோயாளிகள், பணியாளர்கள் பொதுமக்கள் என 170 பேர் சிக்கிக்கொண்டனர். முல்சி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும் மருத்துவமனையின் அடித்தளம் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் தீயணைப்பு படையினர் மீட்பு பணியை தொடங்கினர். 170 பேரும் மீட்கப்பட்டனர். நோயாளிகள் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். புனேயில் நாளை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story