ஸ்ரீநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் - இணையதளம் முடக்கம்


ஸ்ரீநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் - இணையதளம் முடக்கம்
x
தினத்தந்தி 5 Aug 2019 12:42 AM IST (Updated: 5 Aug 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீநகர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் மறு உத்தரவு வரும் வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன் என உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதனால் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

Next Story